Reading Time: < 1 minute
கனடாவின் பகுதியில் நான்கு மாத சிசு ஒன்று மர்மமான முறையில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவின் மிட் டவுன் பகுதியில் அமைந்துள்ள வீடமைப்பு திட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு மாத சிசு ஒன்று மர்மமான முறையில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த சிசு காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறெனினும் பின்னர் சிசு விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த நிலையில் குறித்த சிசு மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வருகிறது.
சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்த சிசுவின் மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.