Reading Time: < 1 minute

கனேடிய பொதுத்தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்துவரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன.

மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவைப்படுவதை விட 14 இடங்கள் குறைவாகவே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிடைத்துள்ளது.

கனடாவின் எதிர்க்கட்சியான பழமைவாத கட்சி 122 இடங்களைத் தனதாக்கியுள்ளது. கடந்த முறை, 95 இடங்களை வென்ற நிலையில் இம்முறை, கூடுதலாக 27 இடங்களை வென்றுள்ளது.