ரொறன்ரோ வில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்துச் சம்பவம் விக்டோரியா பார்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டடத்தின் எட்டாம் மாடியில் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தீயனைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வந்த 60 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீயனைப்புப் படையினர் விரைந்து செயற்பட்ட காரணத்தினால் கட்டடத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை என தீயனைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
FIRE: Victoria Park Av + O'Connor Dr 8:11am – Smoke coming from an apt on the 8th floor@TPS55Div is on scene with @Toronto_Fire – Active fire in unit#GO1003168 ^lb
— Toronto Police Operations (@TPSOperations) May 28, 2022