Reading Time: < 1 minute

பணவீக்கத்துக்கு எதிராக போராடுவதற்காகவும், நாட்டின் தொழிலாளர் சந்தையில் காணப்படும் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காகவும் புலம்பெயர்தலைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்பது குறித்து கனடா வங்கி ஆளுநரான Tiff Macklem சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

கனடா வங்கி ஆளுநரின் உரையில் இடம்பெற்ற கேள்விகள்
ஏன் போதுமான பணியாளர்கள் கிடைக்கவில்லை?

கனடா பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்கிறதா?

பொருளாதார மந்தநிலையால் வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்குமா?

இந்த பிரச்சினைகள் விடயத்தில் உதவுவதில் கனடா வங்கியின் பங்கு என்ன?

தொழிலாளர் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு, புலம்பெயர்ந்தோரை பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக கனடா வங்கி ஆளுநர் ஆற்றிய உரையின் சுருக்கம் இதுதான்.

கனடாவில் தொழில் நடத்துவோர் புலம்பெயர்ந்தோரைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்
தொழிலாளர் பற்றாக்குறையால் நாடு முழுவதும் ஊதியங்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள Tiff Macklem, அதனால் பணவீக்கமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே, கனடாவில் தொழில் நடத்துவோர் புலம்பெயர்ந்தோரை தொடர்ந்து பணிக்கு எடுத்துக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தும் Tiff Macklem, குறிப்பாக, புதிதாக புலம்பெயர்ந்துவந்துள்ளவர்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார்.

தேவையையும் வழங்கலையும் மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கான ஒரு வழி பணியாளர்களை அதிகப்படுத்துதலாகும் என்கிறார் அவர். அதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்தும்போது, தேவைகள் குறித்த விடயங்களைக் குறைவாக செய்வதே போதுமானதாக இருக்கும் என்று கூறும் Tiff Macklem, கூடுதல் புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்துதல், அதிக ஊதியங்களை ஒழுங்குபடுத்த உதவலாம் என்றும், அது கட்டாயம் தேவை, ஏனென்றால், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவேண்டுமானால், ஊதியங்களின் வேகம் குறைக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார் அவர்.