தொலைபேசி மோசடிக்காரர்களால் அவதானமாக இருக்குமாறு தண்டர் பே பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோசடியில், தண்டர் பே நகரத்தின் சார்பாக அழைக்கப்படுவதாகக் கூறும் மோசடிக் காரர்கள், பணம் செலுத்த வேண்டியிருப்பதனை மக்களுக்கு வலியுறுத்துவதாக கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், மோசடி செய்பவர்கள் உண்மையில் பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த அழைப்புகள் தொடர்ச்சியான ஃபிஷிங் மோசடியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று பொலிஸார் எச்சரிக்கின்றனர்.
இதில் மோசடி செய்பவர்கள் மக்களை தங்கள் தனிப்பட்ட தகவல்கள், அல்லது கடவுச்சொற்கள், கணக்கு எண்கள் அல்லது சமூக காப்பீட்டு எண்களை திருட முயற்சிப்பார்கள்.
எந்தவொரு நிறுவனத்திற்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் வழங்க வேண்டாம் என்று பொலிசார் அறிவுறுத்துகிறார்கள்.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்பு வந்தால், எந்தவொரு கணக்குகளின் நிலையையும் சரிபார்க்க, கேள்விக்குரிய அமைப்பு அல்லது நிறுவனத்தை சுயாதீனமாக தொடர்பு கொள்ளுங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.