அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் அது ஆபத்தாக அமையும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காலநிலை மாற்றம் குறித்த முயற்சிகளை ட்றாம்பின் வெற்றி பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்றாம்ப் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக வெற்றியீட்டினால், அது பாதகமானது என தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதியீட்டம் செய்யப் போவதில்லை எனவும்,காலநிலை மாற்றம் குறித்த விஞ்ஞானத்தில் தமக்கு உடன்பாடில்லை என அண்மையில் ட்றாம்ப் குறிப்பிட்டிருந்தார்.
டொனால்ட் டிரம்ப் வெற்றியீட்டினால் உலக அளவில் காலநிலை மாற்றம் குறித்த முனைப்புக்கள் பாதிக்கப்படும் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.