தெற்கு அல்பர்ட்டாவில் ஐந்து பாடசாலைகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்ல்வுட் பாடசாலை, செயின்ட் ஏஞ்சலா பாடசாலை மற்றும் கல்கரியில் உள்ள லெஸ்டர் பி. பியர்சன் உயர்நிலைப் பாடசாலை, ரேமண்டில் உள்ள ரேமண்ட் உயர்நிலைப் பாடசாலை மற்றும் கன்மோர் நகரில் உள்ள லாரன்ஸ் கிராஸி நடுநிலைப் பாடசாலை ஆகியவற்றில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று பரவுவதற்கான அபாயத்தைக் கட்டுப்படுத்த பாடசாலைகளுடன் நேரடியாகப் பணியாற்றி வவருதாக அல்பர்ட்டா சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அல்பர்ட்டா சுகாதார சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வகுப்பறை அமைப்பை மதிப்பிடுவதும், தொற்றுகளின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் கண்டு மதிப்பிடுவதும் இதில் அடங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படும் எந்தவொரு நபரும் அல்பர்ட்டா சுகாதார சேவையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.