Reading Time: < 1 minute

கனடாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளும் கூட்டு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), நாளை வியாழக்கிழமை அந்நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகனைச் (Tayyip Erdogan) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அணுசக்தி, திரவ இயற்கை எரிவாயு, ஆளில்லா விமானங்கள் மற்றும் கடற்படை ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வெள்ளிக்கிழமை இஸ்தான்புல்லில் துருக்கிய வர்த்தகத் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.அமெரிக்காவுடனான வர்த்தகச் சார்பைக் குறைத்து, புதிய சர்வதேசப் பங்காளித்துவங்களை உருவாக்கும் கனடாவின் முயற்சியாக இந்த விஜயம் அமைந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.