Reading Time: < 1 minute

அண்மையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத சந்தேக நபர் மாணவர் வீசா மூலம் கனடாவிற்குள் பிரவேசித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த பாகிஸ்தான் பிரஜை கனடாவிற்குள் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபரை கியூபெக் மாகாண போலீசார் கைது செய்திருந்தனர்.

நியூயோர்க் நகரம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என குற்றம் சுமத்தி குறித்த நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த நபர் தொடர்பில் மேலதிக தகவல்களை தம்மால் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அரசியல்வாதியாகவும் பொதுமக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் நீதிமன்ற விசாரணைகளில் தம் தலையீடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருத்து வெளியிடுவது பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நபர் மாணவர் வீசா அடிப்படையில் கனடாவிற்குள் பிரவேசித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

முகமட் ஸெஸாப் கான் என்ற 20 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபர் கனடாவிற்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.