ரொறன்ரோவில் தாய் மற்றும் மகள் மாயமான வழக்கில் 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் Whitby பகுதியில் இருந்து தாயார் மற்றும் மகள் இருவரும் இந்த மாத துவக்கத்தில் திடீரென்று மாயமாகினர். 58 வயதான Ava Burton மற்றும் அவரது தாயார் 85 வயதான Tatilda Noble ஆகிய இருவரும் அக்டோபர் 14 முதல் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் டர்ஹாம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வந்தனர். மாயமான தாய் மற்றும் மகள் இருவரும் வசித்து வந்த குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை டர்ஹாம் பிராந்திய பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த தாய் மற்றும் மகள் மாயமான வழக்கில் Ava Burton-ன் 30 வயது மகனை கொலை வழக்கில் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இருவரது சடலங்களை இதுவரை மீட்கவில்லை என்றபோதும், விசாரணையில் கண்டிப்பாக துப்புத்துலங்கும் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 10 மற்றும் 14ம் திகத்திக்குள் இருவரும் மாயமாகியிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைதான நபரிடம் விரிவான விசாரணைக்கு பின்னரே, இந்த கொலை வழக்கின் பின்னணி தெரியவரும் என டர்ஹாம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.