இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது அதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா தலைமையிலான குழுவினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் புதுடில்லியில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.
இதன்போதே மேற்கண்டவாறு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இந்த தரைவளிபாலம் தொடர்பாக தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் இடைக்கலநாதன் அண்மையில் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
இந்தி இலங்கை மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின்னரே இந்த பாலத்தினை அமைக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.