Reading Time: < 1 minute

கனடா: தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் கனடாவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (புதன்) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் (Oakville) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்.

வைத்தியர் சுந்தரம் விவேகானந்த் ஐயரின் புதல்வியான இவர் இந்தியாவின் தமிழ்நாடு வேலூரை குடும்பப் பின்னணியாகக் கொண்டவராவார்.

Canada: The first minister with a Tamil heritage background has been appointed in Canada.

Anita Anand, a Member of Parliament for the riding of Oakville, has been appointed Minister of Public Services and Procurement by Prime Minister Justin Trudeau today (Wednesday).

She won her first election and is a professor of law at the University of Toronto.

She is the daughter of Dr. Sundaram Vivekanand Iyer, who has base in Vellore, Tamil Nadu, India.