ஹூவாவே நிறுவனத்தின் தலைமை அதிகாரியைக் கைது செய்த விவகாரத்தில் தனது தரப்பு தவறுகளை கனடா உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், ஹூவாவே அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கனடாவுக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
நேற்று தனது பதவி நியமனத்தின் போது இதனை வலியறுத்தியுள்ள அவர், தற்போதய நிலவரப்படி கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவானது மிகவும் மோசமான நிலையினை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவே கனடா தனது சொந்த தவறை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த விடயத்தில் சீனாவின் நிலைப்பாட்டையும் அக்கறையையும் கனடா கடுமையாக நோக்க வேண்டும் என்றும், அந்த வகையில் மெங் வான்ஷோவை உடனடியாக விடுத்து அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும், நிலவரத்திற்கும் கனடாவே பொறுப்பு எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.