Reading Time: < 1 minute

கனேடிய பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் பரவலான நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும் என்று ஒன்றாரியோ தடுப்பூசி பணிக்குழுவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அனுமதியளித்தது.

மொடர்னா இன்க் கொவிட்-19 தடுப்பூசியை கனடாவில் பயன்படுத்த ஹெல்த் கனடா, கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இது கடுமையான பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத் தேவைகளை பூர்த்தி செய்ததாக கூறப்படுகின்றது.

தற்போது இரண்டு வகை தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளித்துள்ளநிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டாக்டர் ஐசக் போகோச் இதுகுறித்து கூறுகையில், ‘கொவிட்-19க்கு எதிரான இரண்டு உயிர் காக்கும் தடுப்பூசிகளை அணுகுவதன் மூலம் இந்த ஆண்டு நிறைவு செய்யும் நாடுகளின் சிறிய குழுவில் கனடாவும் உள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்கள் டிசம்பர் 24ஆம் திகதி முதல் அளவைப் பெறுகிறார்கள். அது மிகவும் உன்னதமானது’ என கூறினார்.