Reading Time: < 1 minute
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தியவர்கள் கனடா வரும்போது தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மற்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் கனடாவில் நுழைவதற்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும்.
கனடாவில் கரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக கனடாவில் 61 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.