Reading Time: < 1 minute

கொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டத்தின் போது கனேடியர்கள் தனியுரிமைக்கு உயர்ந்த மதிப்பு கொடுக்க வேண்டும் என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த முறைமையினை மாகாண மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த நடவடிக்கைகளின் போது, கனேடியர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கனடாவுக்கு பொருந்தக்கூடிய பல்வேறு மாதிரிகளில் பல திட்டங்களும் நிறுவனங்களும் நம்மிடம் உள்ளன.

ஆனால், நாம் முடிவுகளை எடுப்பதில் முன்னேறுவதால், கனடியர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் அவர்களின் தரவு பாதுகாப்புக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளப் போகிறோம்’ என கூறினார்.

இலக்கமுறைத் தடமறிதல் முறைகள் நோய் பரிமாற்ற வீதங்களைக் குறைக்கக்கூடும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.