டொரோண்டோவில் இந்த ஆண்டின் முதலாவது ஆபத்தான West Nile வைரஸ் தாக்கம் பதிவாகியுள்ளதாக, பொதுச்சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.
நுளம்பு மூலமாக பரவும் இந்த வைரஸ் தொற்றுக்கு, டொரொண்டோவை சேர்ந்த ஒருவர் ஆளாகியுள்ளமை, ஆய்வுகூட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.
டொரோண்டோவில் West Nile வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் இன்னமும் குறைவாகவே இருந்தாலும், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அது அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு 39 West Nile வைரஸ் தொற்றுக்கள் டொரோண்டோவில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.