டொரன்டோ மிருகக்காட்சி சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கொரில்லாக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்குமாறு விசேட கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
டொரன்டோ மிருகக்காட்சிசாலை நிர்வாகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
மிருகக்காட்சி சாலைக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது அலைபேசிகளில் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணொளிகள், புகைப்படங்கள் என்பவற்றை பார்வையிடுவதனால் கோரிலாக்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரில்லாக்கள் மனநிலை பாதிக்கப்பட்டால் அவற்றின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரில்லாக்கள் இயற்கையான முறையில் அதன் இயற்கை தன்மையுடன் வாழ்வதற்கு இவ்வாறான செயற்பாடுகள் தடை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிருகக் காட்சிசாலைக்கு வரும் பொதுமக்கள் கொரில்லாக்களுக்கு காணொளிகளையும், புகைப்படங்களையும் காண்பித்து அவற்றின் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரில்லா கூட்டத்திற்குள் முரண்பாடு ஏற்படுத்தக் கூடிய வகையிலான காணொளிகள் புகைப்படங்களை காண்பிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.