ஜி 7 நாடுகளின் மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ள ஒளிப்படம் உலகளவில் வைரலாகுவதற்கு அதனை ஔிப்படப்பிடிப்பாளர் எடுத்த கோணமே காரணமாகும்.
மெலெனியா ட்ரம்ப் – பிரதமர் ட்ருடோவை சாதாரண மேலைத்தேய பாணியில் வரவேற்ற ஒளிப்படமே இவ்வாறு வைரலாகியுள்ளது.
பிரான்ஸில் இடம்பெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் பின்னர் முக்கிய பேசுபொருளாகிய குறித்த ஒளிப்படம் ‘கிளிக்’ செய்யப்பட்ட விதம்தான் தற்போது வைரலாகுவதற்கு மூல காரணமாக அமைந்துள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைப் நோக்கும் மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஒளிப்பட கலைஞர் ஒருவர் இந்த ஒளிப்படத்தை எடுத்தபோது, மெலனியாவின் முகபாவனை மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முகபாவனை என்பன முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.

இதையடுத்து இணையத்தள பாவனையாளர்கள் பலரும் இந்த ஒளிப்படம் குறித்து கருத்துக்களை பறிமாறி வேகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் #MelaniaLovesTrudeau எனும் ஹேஷ்டாக்கினை வைரலாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


