Reading Time: < 1 minute

கனடிய வாடிக்கையாளர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் வட்டி வீத குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பொருளாதாரம் குறித்து சாதக நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் குறிப்பாக வாடிக்கையாளர்கள் நிதி அழுத்தங்களை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் பொருளாதார அழுத்தங்கள் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில் மக்கள் தங்களது நிதி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

கனடியா மத்திய வங்கியினால் வாடிக்கையாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

வியாபார முயற்சிகளில் ஈடுபடுவோரும் கூடுதல் தொகையை முதலீடு செய்ய விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சந்தையின் நிலைமைகள் குறித்த நிச்சயமற்ற தன்மையை வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.