Reading Time: < 1 minute

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடிய அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் சூடான் சமூகத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் இராணுவத்திற்கும், துணை இராணுவக்குழுவிற்கும் இடம்பெற்று வரும் போரில் பொதுமக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூடானின் நிலைமைகள் குறித்து பெரும் கவலை கொண்டுள்ளதாக சூடான் கனடிய சமூக ஒன்றியத்தின் தலைவர் அஷ்ரப் அம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றில் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக சூடான்-கனடியர்கள் தற்பொழுது போருக்கு நடுவில் சிக்கியுள்ளதாகவும், நம்பிக்கையற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூடான் மக்களின் நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தத் தவறியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சூடான் போர் விவகாரத்தில் கனடிய அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூடானின் நிலைமைகள் குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பிய கடிதங்கள் மின்னஞ்சல்களுக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.