Reading Time: < 1 minute

சூடானிலிருந்து மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக குறித்த பகுதி;யில் அமைதியின்மை நிலவி வருகின்றது,

இந்த நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் வெளியேறி வருகின்றனர்.

இதுவரையில் 2 ஆயிரத்து 930 இந்தியர்கள் சூடானிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.