சூடானிலிருந்து முதல் கனடா மீட்பு விமானம் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போர் காரணமாக சூடானில் சிக்கியிருந்த ஒரு தொகுதி கனடியர்கள் விமானம் மூலம் கனடா நோக்கிப் பயணித்துள்ளனர்,
சூடானில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையின் கீழ் கனடா படையினர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சூடானில் தங்கியுள்ள கனேடியர்களை மீட்பதில் அரசாங்கம் மெத்தனப் போக்கில் செயற்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சூடானில் சுமார் 1800 கனேடியர்கள் வாழ்ந்து வருவதாகவும் இதில் 700 பேர் நாட்டிலிருந்து வெளியேற விரும்புவதாக கனடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டுப் பிரஜைகளை சூடானிலிருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.