கனடாவில் தம்பதி தம்பதியினர் விசித்திரமான அனுபவம் ஒன்றை எதிர் நோக்க நேரிட்டுள்ளது.
12 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய குறித்த தம்பதியினர் தமது காரில் சிலர் தங்கி இருந்ததனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீடு திரும்பி காரை பார்த்த போது அந்த காரில் பல்வேறு பொருட்கள் காணப்பட்டதாகவும் எல்லா இடங்களிலும் குப்பைகள் போடப்பட்டிருந்ததாகவும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.
தமது காரை, யாரோ குடியிருப்பாக மாற்றி உள்ளனர் என்பது தெளிவானது என குறிப்பிடுகின்றனர். வாகனம் சேதமடைந்து இருந்ததாகவும் Kayla Duplantis-Whitewick தெரிவிக்கின்றார்.
எனினும் தாங்கள் வீடு திரும்பிய போது காரில் எவரும் இருக்க இருக்கவில்லை என குறிப்பிடுகின்றார்.
காலையில் மீண்டும் காரை சென்று பார்த்தபோது ஒரு தம்பதியினர் உள்ளே இருந்ததை கண்டதாகவும் உடனடியாக போலீஸாருக்கு இது குறித்து அறிவித்ததாகவும் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் அந்த இடத்திலிருந்து தப்பி சென்று விட்டதாகவும், குறித்த ஆணை போலீசார் கைது செய்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த காரை தாங்கள் வாங்கியதாகவும் இது தமது கனவு கார் எனவும் அந்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர் வாகனம் அதிக அளவில் வீதியில் செலுத்தப்படவில்லை என குறிப்பிடுகின்றனர்.