சீரற்ற காலநிலை காரணமாக கனடாவின் சில பகுதிகளின் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் தாக்கம் காரணமாக நோவா ஸ்கோட்டியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு போன்ற பகுதிகளின் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும், 40 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
40மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் எனவும் இது சில பகுதிகளில் வெள்ள அபாயத்தை உருவாக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நோவோ ஸ்கோட்டியாவின் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பனிப்புயல் காரணமாக சிறிய அளவிலான சில வாகன விபத்துக்கள் பதிவாகியு;ள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 13,000 வாடிக்கையாளர்கள் மின்சார வசதியின்றி அவதியுறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.