கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து திரும்பும் அனைவரும் நீண்ட காலத்திற்கு சுய கண்காணிப்பு செய்ய வேண்டும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல, சீன மாகாணமான ஹூபேயில் இருந்து திரும்பும் எவரும் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார நிறுவனம் கூறுகின்றது.
இதேவேளை, இந்த வாரம் பதினைந்து பேரிடம், மனிடோபாவில் உள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை என பொது சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்தோடு, மாகாணத்தில் ஆபத்து குறைவாக உள்ளது என்று பொது சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
பொது சுகாதார அதிகாரிகள் பொது இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கவில்லை, ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
கனடாவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்ராறியோ ஆகிய இடங்களில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.