Reading Time: < 1 minute

கனடாவில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு டொலர் நாணய குற்றிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.

சுமார் 26302 இரண்டு டொலர் நாணயக் குற்றிகளை இறக்குமதி செய்துள்ளார்.

இவ்வாறு பெருந்தொகை போலி நாணயங்களை இறக்குமதி செய்த நபருக்கு கணடிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கனடிய வரலாற்றில் இதுவரையில் இவ்வளவு பாரிய அளவு போலி நாணய குற்றிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் கனடிய போலி நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஜீன் பிரான்கொயிஸ் ஜெனிரியோக்ஸ் என்ற நபரே இவ்வாறு போலி நாணயங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.

குறித்த நபருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி நாணயங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கஞ்சா போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மேலும் 30 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மற்றும் போலி நாணயம் தொடர்பில் தவறிழைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏற்கனவே குறித்த நபர் தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடிகள், களவு ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் குறித்த நபர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே 3 தடவைகள் குறித்த நபர் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.