சீனாவின் சவால்களைச் சமாளிக்க ஜி-07 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்றுவரும் ஜி-07 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று சனிக்கிழமை சீனா குறித்த விவாதம் இடம்பெற்றது.
ஜி-07 நாடுகளின் 7 தலைவர்களுக்கு பங்கேற்ற இந்த விவாதத்துக்கு கனேடியப் பிரதமர் ட்ரூடோ தலைமை தாங்கினார்.
இந்த விவாதத்தின்போது சீனாவின் சவால்களைச் சமாளிக்க ஜி-07 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.
ஜி-07 நாடுகளின் தலைவர்கள் சுமார் 40 டிரில்லியன் டொலர் பொருளாதார செல்வாக்கைக் கட்டுப்படுத்துகின்றனர். இந்நிலையில் சீனா தொடர்பான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதில் அவர்கள் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி சா்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.