Reading Time: < 1 minute

கனடாவின் தென் அல்பர்பட்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக போரில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கனடிய அரசாங்கம் சீன இலத்திரனியல் வாகனங்களுக்கு கூடுதல் வரி அறவிடப்படும் என அறிவித்திருந்தது.

இதன் எதிரொலியாக சீன அரசாங்கம் கனடிய கனோலா உற்பத்திகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்திருந்தது.

இவ்வாறு அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாக அல்பர்ட்டாவில் கனோலா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டிலும் கனடாவிலிருந்து கனோலா இறக்குமதி செய்வதனை சீனா வரையறுத்து இருந்தது.

பூச்சிகள் காணப்படுவதாக காரணம் கூறி இந்த இறக்குமதி வரையறுக்கப்பட்டது.

தற்பொழுது கனடிய கனோலா விலைகள் குறைக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.