சில தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை போலீசார் அமெரிக்காவில் கைது செய்துள்ளனர்.
போலீசார் இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பார்த்தசாரதி கபூர் என்ற நபரே இவ்வாறு போலீசார் கைது செய்துள்ளனர்..
சர்வதேச பிடிவிலாந்து ஒன்றிற்கு அமைய குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
நான்கு சிறுவர்களை குறித்த நபர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
7 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.
அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த நபரை கணடிய போலீசார் அமெரிக்காவில் வைத்து கைது செய்துள்ளனர்.
சிறுவர்களை பாலியல் ரீதியாக துஸ்பிரியோகம் செய்தமை, சிறுவர் ஆபாச படங்களை தயாரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என போலீசார் அறிவித்துள்ளனர்.
குறித்த நபர் அமெரிக்காவில் மேற்கொண்ட பாலியல் குற்றச்செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.