கனடாவில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதாகியுள்ளனர்.
குறித்த பெண்கள் சிறுவர்களை வீட்டின் அடித்தளமொன்றில் தடுத்து வைத்ததுடன் அட்டைப் பெட்டியினுள் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் எட்மென்டன் ரவுன் ஹோம் பகுதியில் சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சகோதரிகளான இரண்டு பெண்களும் ஆறு வாரங்களுக்கு, 3 முதல் 6 வயதுடைய சிறுவர்களை இவ்வாறு அடித்தளத்தில் பூட்டிவைத்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், இவ்வாறாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக குறித்த பெண்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.