கனடா, சஸ்காடூன் பகுதியில் பெண் ஒருவர் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
வயது முதிர்ந்தவர்களிடம் இவ்வாறு அதிகளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பெண் மொத்தமாக 97000 டொலர்களை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வயது முதிர்ந்தவர்களை ஏமாற்றி அதிகளவில் மோசடி செய்துள்ளதாக இந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதான பெண்ணை பொலிஸார் கடந்த 13ம் திகதி கைது செய்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த பெண் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
பல்வேறு நபர்களிடம் தன்னை போலிஸ் உத்தியோகத்தர் எனக் கூறி பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.