Reading Time: < 1 minute

கனடாவின் சஸ்கட்சுவான் மாகாணத்தின் மோசோமின் நகரில் வீடு கட்டுவோருக்கு சன்மானம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரின் சனத்தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நகரில் வீடொன்றை நிர்மாணிப்பவர்களுக்கு 30 ஆயிரம் டொலர் காசோலை வழங்கப்பட உள்ளது.

நகரின் முதல்வர் மரே கிரே இது தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வீடுகளை நிர்மாணிப்போருக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படுவதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

வீடுகளை நிர்மாணிக்கும் கட்டுமான நிறுவனத்திற்கு நேரடியாக முப்பதாயிரம் டொலர் காசோலை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நகர நிர்வாகத்தினால் இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகர மக்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சனத்தொகை அதிகரிக்கும் என அவர்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.