சஸ்கடூனில் உள்ள ரிவர்ஸ்டேல் நீச்சல் தடாகம் மற்றும் ஜோர்ஜ் வார்ட் நீச்சல் தடாகம் ஆகிய இரண்டு வெளிப்புற நீச்சல் தடாகங்கள், கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ரிவர்ஸ்டேல் நீச்சல் தடாகம் இரண்டு மணி நேர அமர்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
நீச்சல் நேரம் 30 நிமிடங்களால் பிரிக்கப்படும். இதனால் ஊழியர்கள் உபகரணங்களை சுத்தம் செய்யலாம்.
இதேவேளை, நாளை (புதன்கிழமை) ஜோர்ஜ் வார்ட் நீச்சல் தடாகம் இதே அடிப்படையில் மீண்டும் திறக்கப்படும்.
நீச்சல் தடாகம் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1-8 மணி வரை திறந்திருக்கும். வார இறுதியில் 11-6 வரை திறந்திருக்கும்.
நகரத்தின் மற்ற இரண்டு வெளிப்புற குளங்களுக்கான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஷா மையம் மற்றும் லக்வுட் சிவிக் மையத்திற்கான திறப்பு திகதிகள் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் அவை ஜூலை மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ரெஜினா நகரம் புதன்கிழமை வடமேற்கு ஓய்வு மையத்தை மீண்டும் திறக்க எதிர்பார்க்கிறது. லாசன் நீர்வாழ் மையம் ஜூலை 13ஆம் திகதி திறக்கப்படும் என்றும் ரீஜண்ட் வெளிப்புறக் குளம் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், சாஸ்கடூன் உயிரியல் பூங்கா புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இது 300 பேருக்கு மட்டுப்படுத்தப்படும்.
அத்துடன், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடைப்பயண பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.