சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் குழாய் பதிப்பு திட்ட விரிவாக்கத்திற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது.
இந்த குழாய்பதிப்பு திட்டமானது, எட்மன்டன், அல்பேர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை மசகு எண்ணெயை கொண்டு செல்லும்.
தற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழாய்பதிப்பு இரு மடங்கு தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். அதன் கொள்ளவு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல்களில் இருந்து 890,000 ஆக உயரும்.
இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வந்த கனடாவின் மேற்கு பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பழங்குடி மக்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த குழாய்பதிப்பு விரிவாக்க திட்டம் கனடாவில் இரு பிரிவினர்களை உருவாக்கியது. ஒரு தரப்பு இந்த திட்டத்தால் எண்ணெய் கசிவு போன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டு என்றும், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
மறுதரப்பு இது கனடாவின் ஆற்றல் துறை ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளதால் கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.