சமூக ஊடகத்தில் நெக்ஸஸ் (Nexus card) அட்டை பெற முயன்ற கனடிய பிரஜை ஒருவர் மோசடியில் சிக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அடிக்கடி அமரிக்காவிற்கு பயணம் செய்பவர்கள் நெக்ஸஸ் அட்டையை பயன்படுத்துவதன் மூலம் இலகுவாகவும் வேகமாகவும் எல்லையை கடக்க முடிகின்றது.
இந்த அட்டையை பெற்றுக் கொள்வதற்கு நேரடியாக நேர்முகத் தேர்வு ஒன்றினை சந்திக்க வேண்டும்.
எனினும் சில இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நெக்ஸஸ் அட்டை தொடர்பில் போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
தற்பொழுது நெக்ஸஸ் அட்டை பெறுவதற்காக 50அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதுடன், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் இந்த தொகை 120 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
எனினும் கனடிய பிரஜை ஒருவர் தனக்கும் தனது மனைவிக்கும் நெக்ஸஸ் அட்டை பெற்றுக் கொள்வதற்காக 1500 டொலர்களை இணைய தளமொன்றுக்கு செலுத்திய போதிலும் அட்டை கிடைக்கவில்லை.
முகநூலில் செய்யப்பட்ட விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் இவ்வாறு பணத்தை செலுத்தி ஏமாந்து விட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
மிஸ்ஸிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.