Reading Time: < 1 minute
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்க, மாகாண அரசு கண்காணிப்பு கிணறுகளை அமைத்து வருகிறது.
கோவிச்சன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கோக்ஸிலா நதி அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக வறட்சி போன்ற நிலைமைகளுக்கு உட்பட்டுள்ளது.
குறிப்பாக நீர் நிலைகள் மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைந்த பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், நீர் கட்டுப்பாடுகள் செயற்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் சால்மன் மீன் மற்றும் பிற உயிரினங்களைக் வாழ வைக்கும் இந்த நதியை பாதுக்காக்க அனைவரும் முன்வர வேண்டுமென மீன்வள உயிரியலாளரும் வள ஆலோசகருமான டிம் குல்சிஸ்கி தெரிவித்துள்ளார்.