Reading Time: < 1 minute

ஏறக்குறைய 17 மாதங்கள் மூடப்பட்ட பின்னர், அடுத்த மாதம் முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு கனடா தனது எல்லைகளைத் திறக்கும்.

எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கை, நாட்டின் தடுப்பூசி வீதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் கொவிட்-19 தொற்றுகளில் தொடர்ச்சியான வீழ்ச்சிக்குப் பின்னர் வருகிறது.

சாதகமான முன்னேற்றம் தொடர்ந்தால், செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து சர்வதேச பயணிகளையும் கனடா வரவேற்கும்.

அனைத்து பயணிகளும் நுழைவதற்கு முன் எதிர்மறை கொவிட்-19 சோதனையை முன்வைக்க வேண்டும்.

அமெரிக்க பயணிகள் மற்றும் அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான மாற்றங்கள், ஒகஸ்ட் 9ஆம் திகதி நடைமுறைக்கு வரும்.

கனேடியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், இதில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 56 சதவீதம் பேர் உள்ளனர். கிட்டத்தட்ட 70 சதவீதம் கனடியர்கள் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.