Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,996ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 137பேர் உயிரிழந்ததோடு, 1,571பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 51,597பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 28,274பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 20,327பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.