Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,478பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து இரண்டாயிரத்து 379பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 649பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 46ஆயிரத்து 479பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 28ஆயிரத்து 251பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.