Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியயோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 26,001பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 053பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து ஐந்தாயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 14ஆயிரத்து 148பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 670பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 64ஆயிரத்து 997பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.