Reading Time: < 1 minute

கொழும்பு – கோட்டை முதல் காங்கசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.

அதன்படி, மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என். ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

வடக்கு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் யாழ்தேவி ரயில் கொழும்பு கோட்டைக்கும் காங்கசந்துறைக்கும் இடையிலும், ரஜரட்ட ரஜின ரயில் கோட்டைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இண்டிபோலகே குறிப்பிட்டுள்ளார்.

ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு ரயில் பாதையில் ரயில்கள் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ரயில் சேவை நேர அட்டவணை பின்வருமாறு.