Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்தவழி முககவசத்தை அணிவதே என கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கியூபெக்கர்கள் பொது வெளியில் இருக்கும்போது முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம். கொவிட்-19 தொற்றை தவிர்ப்பதற்கு அடிக்கடி கை கழுவுதல் மற்றும் இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிப்பது மிகவும் பயனுள்ள வழியாகும்.

ஆனால், முக கவசங்கள் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதன் கூடுதல் நன்மையை அளிக்கும். உடல் ரீதியான தொலைவு சாத்தியமில்லாத பல சூழ்நிலைகளைப் பற்றி கேள்விப்பட்டேன்.

தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி முக கவசத்தை அணிவதே ஆகும். நீங்கள் அவ்வாறு செய்யுமாறு உங்களுக்கு நாங்கள் கடுமையாக பரிந்துரை செய்கிறோம்’ என கூறினார்.

கியூபெக்கில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 39,225பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,131பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.