Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் நாடாளுமன்றக் கூட்டங்கள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் இந்தத் தடை நீட்டிக்கப்படலாம் என்று நாடாளுமன்றத் தலைவர் பப்லோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் – 19 வைரஸ் பரவுவதைத் தடுக்க போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் கனடா அரசு இறங்கியுள்ளது

கனடாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோவுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக பிரதமர் அலுவலகத்துக்கு ஐஸ்டின் செல்ல மாட்டார் என்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார் என்றும் கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றக் கூட்டங்கள் ஏப்ரல் 20ஆம் திகதி வரை இரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.