Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100இற்க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் நோயறிதல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயறிதலின் தற்போதைய நிலைக் குறித்து ஊடகளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த மாதத்தில், வைரஸிற்கான நோயறிதல் பரிசோதனையை மேற்கொண்டதிலிருந்து இதுவரை 114 மாதிரிகளை நோய் கட்டுப்பாட்டு மையம் பரிசோதித்துள்ளது.

வின்னிபெக்கில் உள்ள ஒரு தேசிய ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், பெரும்பான்மையானவர்களுக்கு எதிர்மறையான முடிவுகளே வந்தன. எனினும், ஒரு நபருக்கு மட்டுமே நேர்மறையான முடிவு வந்தது.

இந்த ஆய்வகங்கள் ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இந்த மாதிரிகளை விரைவாக செயலாக்க முடியும் என்பதை உறுதிசெய்கின்றன’ என கூறினார்,

கனடாவில் தற்போது மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் ரொறன்ரோவிலும், மூன்றாவது நபர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் இனங் காணப்பட்டுள்ளனர்.