Reading Time: < 1 minute

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காக போதைப் பொருள் கடத்திய தாதி ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குறித்த தாதி இவ்வாறு போதை மருந்து வகைகளை கைதிகளுக்காக கடத்திச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 50 வயதான குறித்த ஆண் தாதியின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த தாதிக்கு எதிராக நீதிமன்றில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் கைதிகளுக்கு போதை மருந்துகளை விற்பனை செய்து, ஈ ட்ரான்ஸர் முறையில் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக குறித்த தாதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.