கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இரண்டு தீயணைப்பு படைவீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காணாமல் போன தீயணைப்புப் படைவீரர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்த தீயணைப்புப் படைவீரர்கள் இருவர் இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வான் வழியாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் நோக்கில் இரண்டு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மழை மற்றும் பனிப்பாறை உருகுதல் ஆகிய காரணிகளினால் ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மின்சார வசதியை இழந்துள்ளனர்.
மேலும் கொதித்து ஆறிய நீரை பருகுமாறு மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் பேயி செயினட் போல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.