Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பில் 96 எனப்படும் இந்த சட்டம் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று ரீதியான வாக்குறுதியொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகாயுல்ட் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டம் நீதித்துறை, கல்லூரி கல்வி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்திற்கு வருகை தரும் குடியேறிகள் ஆறு மாதங்களின் பின்னர் அரசாங்க நிறுவனங்களுடன் பிரெஞ்சு மொழியில் மட்டும் தொடர்பாட வேண்டுமென இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த சட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆங்கில மொழி பேசும் சமூகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த சட்டம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.