Reading Time: < 1 minute
கனடா- கியூபெக், Sainte-Adele இல் உள்ள Mont-Gabriel ஹோட்டலில் வெள்ளிக்கிழமை பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், காலை 10:15 மணியளவில் தீ பற்ற தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை “நண்பகலில், தீ கட்டுக்குள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் அது சுவர்கள் மற்றும் தளங்கள் வழியாக தொடர்ந்து பரவியது” என்று Saint-Adele மேயர் Michèle Lalonde தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் முக்கிய பகுதியைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம் என Saint-Adele மேயர் குறிப்பிட்டுள்ளார்.