கனடாவின் நகரமொன்றில் கடமையாற்றி வரும் பொலிஸார் நிறவெறி அடிப்படையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கறுப்பின சாரதி ஒருவர் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் தெரிபோன் என்னும் நகரில் கடமையாற்றி வரும் 18 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Pierre-Marcel Monsanto என்ற கனேடிய கறுப்பின பிரஜை ஒருவரின் சார்பில் கியூபெக் மனித உரிமைகள் மற்றும் இளைஞர் உரிமைகள் ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளது.
மொன்சான்டோவிற்கு பொலிஸார் 205000 டொலர்கள் நட்டஈடாக வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 15 தடவைகள் பொலிஸார் தமக்கு மோட்டார் போக்குவரத்து குற்றச் செயல் தொடர்பில் அபராதம் விதித்துள்ளதாக மொன்சான்டோ தெரிவிக்கின்றார்.
எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி இனவெறி அடிப்படையில் தம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து அபராதம் விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
2018ம் ஆண்டு முதல் 2021ம ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 15 தடவைகள் மொத்தமாக 6000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றார்.